உல்லாச மதப் போதகர் மீது துருக்கியில் 1075 ஆண்டு சிறை

துருக்கியில் உல்லாத மதப்போதகர் ஒருவருக்கு 10 வெவ்வேறு குற்றச்சாட்டுகளில் 1075 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய சமய போதனைகளை செய்து வந்த 64 வயதான டினன் ஒக்தர் குற்றவியல் அமைப்பு ஒன்றை நடத்தியதாக அரச வழக்கறிஞர்களால் குற்றம்சாட்டப்பட்டார். 2018 ஆம் ஆண்டு நாடெங்கும் அவரது ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.

ஒக்தர் பெண்களை சூழ வைத்து தமது போதனைகளை செய்து வந்தார். அந்தப் பெண்களை அவர் தனது பூனைக்குட்டிகள் என்றே அழைத்தார். தமது தொலைக்காட்சி அரங்கில் பிராஸ்டிக் சத்திரசிகிச்சை செய்துகொண்ட அந்த பெண்கள் கவர்ச்சி நடனம் ஆட ஒக்தர் தனது உரைகளை ஆற்றுவார்.

இதில் பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம், மோசடி மற்றும் அரசியல் மற்றும் இராணுவத்திற்கு எதிராக உளவுபார்த்தது உட்பட பல குற்றச்சாட்டுகளிலும் ஒக்தர் குற்றங்காணப்பட்டுள்ளார்.

Fri, 01/15/2021 - 14:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை