ரூ. 1,000 சம்பள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிட்டும்

தோட்ட தொழிலாளர்களின் 1,000 ரூபா;

தோட்ட தொழிலாளர்களின் 1,000 ரூபா சம்பள பிரச்சினை தொடர்பில் தொழில் அமைச்சர் விரைவில் இறுதி முடிவை அறிவிப்பார் என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான  சந்திப்பு Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

ஜனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பளம் வழங்குவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் அது வழங்கப்படாதது குறித்து ஊடகவியாலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1,000 ரூபா சம்பளம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்து. ஆனால் இதனை தோட்டக் கம்பனிகள் தீர்மானிக்க வேண்டும். இந்த சம்பளப் பிரச்சினை தொடர்பில் தோட்டத் கம்பனிகள் குறித்து அரசாங்கம் இறுதியாக கொள்கை ரீதியில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும்.

தொழில் திணைக்களமும், தொழில் சங்கமும் தொழில் அமைச்சும் இணைந்து இதுதொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றன. இதுதொடர்பான இறுதி தீர்மானத்தை விரைவில் அறிவிப்பார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம்

Wed, 01/13/2021 - 06:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை