சர்வதேச பாதிப்பு 10 கோடியை தாண்டியது; இலங்கையில் 59,922

உலக மரணம் 22 இலட்சம்; இலங்கையில் 288

உலகில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது.

உலகில் நேற்றுவரை 10,02,86,772 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகில் இதுவரை 21 இலட்சத்து 49 ஆயிரத்து 507 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் நோயிலிருந்து குணமடைந்த வர்களின் எண்ணிக்கை 7,23,13,625 ஆக அதிகரித்துள்ளதுடன் அதற்காக சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2,58,21,791ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 1,10,255 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 922 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 51 ஆயிரத்து 046 பேர் பூரண குணமடைந்த நிலையில் மேலும் 8543 பேர் தொடர்ந்தும் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அத்துடன் இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலாம் இடத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,58,61,597 ஆக அதிகரித்துள்ளதுடன் அங்கு 4 இலட்சத்து 31 ஆயிரத்து 392 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை எமது அயல் நாடான இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளதுடன் அந் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,06,77,710 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்1,53,624 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகில் மூன்றாம் இடத்தில் உள்ள பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 88,72,964 ஆக அதிகரித்துள்ளதுடன் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,17,712 ஆக அதிகரித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பரவி சுமார் 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 05 இடங்களிலுள்ளன. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 7.21 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 21.46 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 2.59 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.10 இலட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 01/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை