மக்களுக்கு தெரியப்படுத்துவது அவசியம் என்கிறது PHI சங்கம்

நாட்டின் கொரோனா வைரஸ் நிலவரம் குறித்த உண்மை நிலையை மக்களிற்கு தெரியப்படுத்த வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல்ரோகன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சமூகத்தின் பல்வேறுபட்ட தரப்பினர் மத்தியில் புதிதாக சிறிய கொத்தணிகள் உருவாகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் சமூக தொற்று காணப்படவில்லை என தெரிவிக்கின்ற போதிலும் நாங்கள் குழப்பமான நிலைமைகளை அவதானிக்கின்றோம். கொழும்பு வடக்கில் பரவிய  கொரோனா நாட்டின் ஏனைய பகுதிகளிற்கும் பரவுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

வழமைபோன்று காலி, குருநாகல், கம்பஹா போன்ற பகுதிகளில் இருந்து நோயாளிகள் அடையாளம் காணாப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்த கொத்தணியுடனும் தொடர்பில்லா நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றனர் என தெரிவித்துள்ள அவர் மருத்துவ பணியாளர்கள் உண்மையான ஆபத்து குறித்து மக்களிற்கு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Mon, 12/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை