சட்ட மாஅதிபருக்கு தொற்று இல்லை PCR பரிசோதனை முடிவு

சட்ட மாஅதிபர் டப்புல லிவேராவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லையென்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 வவுனியா நிகழ்வில் கலந்துகொண்ட சட்ட மாஅதிபர் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர்கள் எவருக்கும் வைரஸ் தொற்று காணப்படவில்லையென சட்ட மாஅதிபரின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ விடுதியை திறந்து வைப்பதற்கு அங்கு சென்றிருந்த சட்ட மாஅதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கே மேற்படி பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட சட்டத்தரணி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சட்ட மாஅதிபர்,அவருடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வவுனியா நீதித்துறை அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள், பொலிஸ் உயர் மட்ட அதிகாரிகள் என பலரும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்ததுடன் அவர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

 

 லோரன்ஸ் செல்வநாயகம்

Sun, 12/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை