உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்கும் 'Made in Sri Lanka' திட்டம் அங்குரார்ப்பணம்

உள்நாட்டு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு உரிய சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுக்க முடியாமல் இருப்பது நீண்ட கால பிரச்சினையாக உள்ளது. இதற்கு தீர்வாக உள்நாட்டு உற்பத்திகளுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் 'Made in Sri Lanka' வர்த்தக நாமத்தின் புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

உள்நாட்டு தொழில் முயற்சியாளர்களுக்கு தமது உற்பத்திகளுக்கு உரிய சந்தை வாய்ப்பை பெற முடியாதுள்ளது.இதற்கு தீர்வாக 'Made in Sri Lanka' வர்த்தக நாமத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்திகளை சந்தைப்படுத்த களமமைத்துக் கொடுக்க இருக்கிறோம்.

இன்று கோல்பேஸ் ஹோட்டலில் 'Made in Sri Lanka' திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படுகிறது. 100வீதம் உள்நாட்டு மூலப் பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்பட்ட பொருட்களுக்கு ஒரு நிறமும் 75 பயன்படுத்திய பொருட்களுக்கு மற்றொரு நிறமும் வழங்கப்படும்.நிபுணர் குழு இது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ளதோடு இதனூடாக நிற அடையாளம் வழங்கி அந்த உற்பத்திகளை ஊக்குவிக்க இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்தத் திட்டத்தை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்க உள்ளதாகவும் 'Made in Sri Lanka' திட்டம் 2021 நடுப்பகுதியில் முழுமையாக செயற்படுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Tue, 12/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை