பளையில் LRC காணி வழங்கலில் பாரிய முறைகேடுகள்

ஜனாதிபதிக்கு சந்திரகுமார் கடிதம்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் காணப்படுகின்ற காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணிகள் பகிர்ந்தளிப்பதில் பாரிய முறைகேடுகள் இடம்பெறுவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு.சந்திரகுமார் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பெரும் செல்வந்தர்கள், அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களின் செல்வாக்குகளை பயன்படுத்தி பல ஏக்கர் காணிகளை பெறுவதற்கான இறுதிகட்ட நடவடிக்கை வரை சென்றுள்ளனர். இதற்காக பணப் பரிமாற்றங்களும் அரசியல் மற்றும் அதிகார செல்வாக்குகளும் பிரயோகிக்கப்படுவதாகவும் தனது கவனத்திற்கு பொது மக்கள் கொண்டு வந்திருப்பதாகவும், பிரதேசத்தில், மாவட்டத்தில் காணியற்ற அல்லது விவசாயம் மேற்கொள்ள போதிய காணியில்லாத மக்கள் உள்ள போதும் மாவட்டத்திற்கு வெளியேயும் மாகாணத்திற்கு வெளியேயும் என பலர் இக் காணிகளை பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளனர். என தெரவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், இது தொடர்பில் தான் ஜனாதிபதியின் கவனத்திற்கும் மற்றும் பிரதமர் காணி அமைச்சர், காணி அமைச்சின் செயலாளர், காணி சீர்திருத்த ஆணைக்குவின் தலைவர் ஆகியோருக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி நிருபர்

Thu, 12/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை