தடுப்பூசி விநியோகத்திற்கு சரக்கு விமானங்கள் தயார்

தடுப்பூசிகள் எவ்வளவு இருந்தாலும் பிரச்சினை இல்லை அவற்றைச் சரியாகக் கொண்டு சேர்க்கும் வசதிகள் தங்களிடம் உள்ளதாகச்

சரக்குகளை கொண்டு சேர்க்கும் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கச் சரக்கு விமான நிறுவனங்களான பெடெக்ஸ் கோர்ப், யுனைடட் பார்சல் சேர்விஸ் ஆகியவை அந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.

தற்போது கொவிட்–19 நோய்த் தொற்றுக்கு எதிரான தடுப்பூசித் தயாரிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதனால் வரும் நாட்களில் உலக அளவில் தடுப்பூசிகள் பல நகரங்களுக்கு அனுப்பப்படலாம்.

அவற்றைக் கொண்டு செல்லும் சரக்கு விமானங்களுக்கும் மற்ற போக்குவரத்து வசதிகளுக்கும் பெரிய சவால்கள் காத்திருக்கின்றன.

அமெரிக்காவுக்கு மட்டும் சுமார் 65,000 தொன் அளவுக்குத் தடுப்பூசிகள் விமானம் மூலம் விநியோகிக்கப்படலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  

Thu, 12/10/2020 - 11:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை