அமெ. மக்களுக்கு நிவாரண திட்டம்: ட்ரம்ப் கையெழுத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொவிட்–19 நோய்த்தொற்றைச் சமாளிப்பதற்கான நிவாரண நிதி சட்டமூலத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

பல மில்லியன் அமெரிக்கர்கள் தங்கள் வேலையின்மை அனுகூலங்களை மீண்டும் பெற அந்த 2.3 டிரில்லியன் டொலர் மதிப்பிலான திட்டம் வழிவகுக்கும்.

மேலும், ட்ரம்ப் சட்டமூலத்தில் கையெழுத்திட்டதால் மத்திய அரசாங்க வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அடுத்த மாதம் 20ஆம் திகதி ஜனாதிபதி பொறுப்பிலிருந்து விலகும் ட்ரம்ப், இதற்கு முன் சட்டமூலத்தில் கையெழுத்திட மறுத்துவந்தார்.

சிரமப்படும் அமெரிக்க ர்களுக்கான நிவாரணத் தொகை 600 டொலரிலிருந்து 2000 டொலருக்கு உயர்த்தப்பட வேண்டும் என்று அவர் இப்போது கேட்டுக்கொண்டுள்ளார்.

அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் பலரும் கூறினர்.

சுமார் 14 மில்லியன் பேர் பயன்பெற்றுவந்த வேலையின்மை அனுகூலத் திட்டம் கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 26) முடிந்தது. அது மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

 

Tue, 12/29/2020 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை