வடக்கு, கிழக்கு உட்பட ஐந்து மாகாணங்களுக்கு இன்று கடும் மழை

- 150 மிமீ.மேல் பதிவாகும்

நாட்டை அண்மித்த பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் வடக்கு, கிழக்கு, வடமத்திய மத்திய, வடமேல் மாகாணங்கள் உட்பட பதுளை மாவட்டத்திலும் கடும் மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இப்பகுதிகளில் சுமார் 150 மில்லி மீட்டருக்கும் அதிகமான கடும் மழை வீழ்ச்சி பதிவாகமென வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும். அத்துடன் இடி மின்னலும் ஏற்படக்கூடும். இதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொதுமக்களை வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் வடமேல் மாகாணம், பதுளை மாவட்டம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களிலும் மாலை வேளைகளில் அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 75 மில்லி மீட்டர் மழை பதிவாகுமென்றும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

இன்னும் 24 மணி நேரத்திற்கு கடும் மழை செய்யக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் தென்கிழக்கு திசையிலிருந்து வரும் கருமேகக் கூட்டங்கள் காரணமாக இந்த கடும் மழை செய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

Mon, 12/28/2020 - 10:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை