நாட்டின் இறைமை விடயத்தில் எந்த விட்டுக்கொடுப்பும் கிடையாது

ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல

 

நாட்டின் இறைமை விடயத்தில் எந்த விட்டுக்கொடுப்பும் கிடையாது என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தினுள் எமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் யாவும் பொய்யாக்கும் வகையில் மக்கள் ஆசிர்வாதத்துடன் பணியாற்றப் போவதாக தெரிவித்தார்.  வரவு செலவுத்திட்ட இறுதிநாள் விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

வரலாற்றில் முதன்முறையாக 60 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க ஒரு நாளில் முடிவு எடுத்து செயற்படுத்தப்பட்டது. மத்திய நெடுஞ்சாலை தொடர்பில் குற்றச்சாட்டுகள் உள்ளன.மோசடிகள் இடம்பெற்றன.

வரவு செலவுத்திட்டம் குறித்து விவாதித்தாலும் அடுத்த வருடம் அது செயற்படுத்தப்பட்டுள்ளதா என்பதே முக்கியமானது. 2015 வரவு செலவுத்திட்டத்தில் கல்விக்காக 303 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.

ஆனால் 61 மில்லியன் தான் செலவிடப்பட்டது.2015 இல் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.யுத்தம் நடைபெறும் நிலையிலும் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுக்க முடிந்தது. ஜனாதிபதி தனது படத்தை ஒட்டுவதை நிறுத்தினார்.செலவை குறைத்தார். ஜனாதிபதி செயலக ஆளணியை குறைத்தார்.தேசிய பாதுகாப்பு, இன ஒற்றுமை நாட்டின் பொருளாதாரம் பிரிவினைவாதத்துடன் செய்யும் கொடுக்கல் வாங்கல் என்பன முக்கியமானவை.

14 ஆயிரம் விடுகள் கட்டப்படுகின்றன. போஸ்டர் ஒட்டி பிரசாரம் செய்யவில்லை.ஒரு இலட்சம் கிலோமீட்டர் வீதி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தினுள் எமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மக்கள் நிராகரிப்பார்கள். மக்களின் ஆசிர்வாசம் எமக்குள்ளது.

 

ஷம்ஸ் பாஹிம், சுப்ரமணியம் நிசாந்தன்

Fri, 12/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை