அனைவரும் சுகாதாரத் துறையினரின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும்

சுகாதாரத்துறையினர் வழங்கும் சுகாதார வழிகாட்டல்களை ஒருசிலர் ஒரு சதத்திற்கேனும் கண்டுக்கொள்வதில்லை. ஆனால் நாட்டின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அனைவரும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டுமென பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரித்தார்.

கந்தானை புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நடைபெற்ற சமய ஆராதணையில் கலந்துகொண்டு ஆராதனை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கொவிட்19 வைரஸ் தொற்று ஏற்பட்டமையின் காரணமாக இலங்கை மக்களுக்கு தமது அன்றாட வாழ்வாதாரத்தை ஈட்டிக்கொள்ள முடியாது போயுள்ளது. கொவிட் தொற்று எவ்வாறு ஏற்பட்டதென்பதை விசாரணை செய்வது பொறுத்தமானதாக இருக்கும். இவை வெறுனே ஏற்படுவவை அல்ல. மனிதர்களால் உருவாக்கப்படுபவையாகும். எமது வாழ்நாளில் எம்மைவிட அந்நியர்களின் நலனை பற்றி சிந்திக்க வேண்டும்.

இலங்கையில் கொவிட்19 தொற்று தீவிரமாக பரவும் சூழலில் அவற்றுக்காக உருவாக்கப்பட்டுள்ள சட்டத்திட்டங்களை சிலர் ஒருசதத்திற்கேனும் கணக்கெடுப்பதில்லை. சட்டத்திட்டங்களை மீறுவதுடன் அவற்றை செயலிழக்கவும் செய்கின்றனர். அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் தமது கட்சிகளை கைவிட்டு அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை பாதுகாப்பற்கு பதிலாக ஒருவருக்கு ஒருவர் விமர்சனம் செய்துக்கொண்டு சமூகத்திற்கு நாசகாரத்தை ஏற்படுத்துகின்றனர்.

சுகாதாரத்துறையினர் எமக்கு கூறும் சுகாதார வழிகாட்டல்களை நாம் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 12/26/2020 - 10:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை