பண்டிகை காலத்தில் சுகாதார வழிகாட்டி

பொது மக்களுக்கு அறிவுறுத்து

பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன வழி காட்டுதல்களை வெளியிட்டு, பண்டிகை காலங்களில் கொரோனா தொற்று வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு அவற்றைப் பின்பற்றுமாறு பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.

*பண்டிகை காலங்களில் பயணத்தைக் குறைக்கப் பொது மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

குடும்பத்தில் ஒருவர் மாத்திரம் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதை உறுதி செய்யவும்.

*அருகிலுள்ள வர்த்தக நிலையங்களிலிருந்து பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டும்.

*பண்டிகை காலங்களில் குடும்பம் அல்லது நட்பு கூட்டங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்பதுடன், அத்தகைய கூட்டங்களை உடனடி குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுப்படுத்தவும்.

*பண்டிகை காலத்திற்காக ஏனையவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும்போது உடல் ரீதியான தொடர்பிலிருந்து விலகி இருக்கவும், அனைத்து நேரங்களிலும் சமூக இடைவெளியை பேணவும்.

தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக, பொது இடங்களில் சமூக இடைவெளியை பேண தவறும் நபர்களுக்கு அல்லது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறும் நபர்களுக்கு சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு வலியுறுத்தப் பொதுமக்களுக்கு உரிமை உண்டு.

பண்டிகை காலங்களில் பொருட்களை வாங்குவதற்குக் கிடைக்கக்கூடிய ஒன்லைன் விநியோக சேவைகளைப் பயன்படுத்தவும் பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த காலகட்டத்தில் வெளிச் செல்லும்போது முகக் கவசம் அணியவும், சமூக தூரத்தைப் பராமரிக்கவும், தொடர்ந்து கைகளைக் கழுவவும் அல்லது சுத்தப்படுத் தவும்.

 

Fri, 12/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை