அரச தகவல்களை அறிந்துகொள்ள மக்களுக்கு சந்தர்ப்பம்

அரச தகவல்களை மக்கள் அறிந்துகொள்ளும் சந்தர்ப்பங்கள் நாடுமுழுவதும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கண்டி, மாவட்ட அரசாங்க தகவல் திணைக்கள காரியாலயத்தில் தகவல் பணியகம் ஒன்று நேற்று முன்தினம் (17) அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரையாற்றிய அமைச்சர்,

கண்டி மாவட்ட செயலக வளாகத்தில் செயற்பட்டு வந்த வெளியீட்டு பணியகம் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படவில்லை.

இதன் காரணமாக, மாகாணத்தின் கண்டி ,மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்கள் அரசாங்க வெளியீடுகளை பெற்றுக்கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொண்டுவந்துள்ளனர்.

இவ்வாறான நிலைமையை மாற்றி, மக்கள் அரச தகவல்களை அறிந்துகொள்ளும் வகையில் நாட்டின் 25 மாவட்டங்களிலும் இவ்வாறான பணியகம் ஆரம்பிக்கப்போவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து முக்கிய அரச தகவல்களின், அறிக்கைகளை பெற்று கொள்ளமுடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

(எம்.ஏ.அமீனுல்லா)

Sat, 12/19/2020 - 14:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை