எதிர்கால பெருந்தொற்று பற்றி சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொவிட்–19 நோய்ப்பரவல் உலகின் கடைசிப் பொருந்தொற்றாக இருக்காது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரியேஸஸ் கூறியுள்ளார்.

பருவநிலை மாற்றம், விலங்கு நலன் ஆகியவற்றைச் சமாளிக்காமல், மனிதர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் வீணடையக்கூடும் என்றார் அவர். நோய்ப்பரவலைக் கையாள்வதற்குப் பணத்தைச் செலவு செய்யும் குறுகியகாலப் போக்கை கெப்ரியேஸஸ் கண்டித்தார். அடுத்த நோய்ப்பரவலுக்குத் தயாராக, எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று, கொள்ளைநோய் ஆயத்தநிலைக்கான சர்வதேச தினம் முதன்முறையாக அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு வெளியிடப்பட்ட வீடியோ செய்தியில் கெப்ரியேஸஸின் கருத்துகள் இடம்பெற்றுள்ளன. உலகம் கொவிட்–19 நோய்ப்பரவலிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது என்று அவர் குறிப்பிட்டார்.  

Mon, 12/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை