சுகாதார விதிமுறைகளுக்கமைய சிவனொளிபாதமலை யாத்திரை

- இன்று முதல் ஆரம்பம்

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று (29) ஆரம்பமாக உள்ளதையடுத்து நேற்று புனித தந்ததாது பெல்மதுளையிலிருந்து சிவனொளிபாதமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் (27) மாலை பெல்மதுலையில் கல்பொத்தாவெல சிவனொளிபாதமலை ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டுள்ள புனித தந்ததாதுவுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன், நேற்று (28) அதிகாலை புனித தந்ததாது பெல்மதுளை கல்பொத்தாவெல சிவனொளிபாதமலை ரஜமஹா விகாரையிலிருந்து 4  வீதி வழிகளின் ஊடாக ஊர்வலமாக சிவனொளிபாதமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மேற்படி ஊர்வலம் செல்லும் வீதிகளின் இடைக்கிடையில் அன்னதானம் மற்றும் பானங்கள் வழங்குவதற்கு இம்முறை முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக விரும்பியோர் முக கவசங்கள் மற்றும் தொற்று நீக்கி திரவங்கள் என்பன பக்த அடியார்களுக்கு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிவனொளிபாதமலைக்கு தரிசிக்க செல்லும் அடியார்களின் எண்ணிக்கை 200 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வீதியில் 50 பேர் மட்டுமே செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சிவனொளிபாதமலையில் அனுமதி பெற்று அமைக்கப்பட்டுள்ள கடை தொகுதிகள் அனைத்தும் சுகாதார விதிமுறைக்கமைய நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.ஆரம்பம் முதல் மார்ச் மாதம் 04ஆம் திகதி வரை தேசிய மற்றும் சர்வதேச வைத்திய குழுக்கள், சுகாதார பரிசோதகர்கள், தொற்று நீக்கி குழுக்களை சேவையில் அமர்த்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது.

சிவனொளிபாதமலைக்கு செல்லும் பக்த அடியார்கள் அவர்கள் இருக்கும் இடத்திற்கு பொறுப்பான பிரதேச செயலாளர் காரியாலயத்தில் பதிவு செய்து அதற்கான அத்தாட்சிப்பத்திரத்தை பெற்று கொள்ள வேண்டும்.

காவத்தை தினகரன் விசேட நிருபர்

Tue, 12/29/2020 - 15:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை