ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் வர்த்தக உடன்பாடு

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பின்னர் இருதரப்பு வர்த்தகம் தொடர்பில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. 10 மாத பேரப்பேச்சுக்குப் பின்னர் இது தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

புத்தாண்டில் பிரிட்டன் ஐரோப்பியச் சந்தையிலிருந்து விலகும். அதன் பின்னர் பிரிட்டன் மீது புதிய வர்த்தக வரிகள் விதிக்கப்படமாட்டாது.

2,000 பக்கங்களைக் கொண்ட உடன்பாடு, கடைசிநேரத்தில் சிக்கலை எதிர்நோக்கியது.

ஒன்றிய நாடுகளின் மீனவர்கள் பிரிட்டிஷ் கடற்புறத்தில் மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பில் சர்ச்சை நிலவியது. பின்னர் அதற்குத் தீர்வுகாணப்பட்டது. பிரிட்டன் புத்தாண்டில் மூன்றாம் தரப்பு நாடாக ஆனபோதும், அது நம்பிக்கைக்குரிய பங்காளியாக இருக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

அந்த வர்த்தக உடன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்துப் புத்தாண்டில் முடிவெடுக்கவிருப்பதாக ஐரோப்பிய பாராளுமன்றம் கூறியுள்ளது. ஜனவரியில் கூடும்போது உடன்பாட்டை அது மறுஆய்வு செய்யும்.

ஒன்றிய நாடுகள் 27உடன், ஐரோப்பிய பாராளுமன்றமும் உடன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ஒன்றிய நாடுகளின் தூதர்கள் அந்த உடன்பாட்டை மறுஆய்வு செய்வர் என்று தெரிவிக்கப்பட்டது.

Sat, 12/26/2020 - 07:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை