Header Ads

படகு மூழ்கி இரண்டு நாள் கடலில் தத்தளித்தவர் மீட்பு

அமெரிக்காவின் புளோரிடாவில் படகு உடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்த நபர் ஒருவர் கிட்டத்தட்ட 2 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

62 வயதான ஸ்டுவர்ட் பீ என்ற அந்த ஆடவர் கடந்த வெள்ளிக்கிழமை கனவவெரல் துறைமுகத்தில் இருந்து தனது 10 மீற்றர் நீண்ட படகில் புறப்பட்டுள்ளார். அவர் துறைமுகத்திற்கு திரும்பவில்லை என்று அறிவுறுத்தல் கடந்த சனிக்கிழமை நிர்வாகத்திற்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில் தனது மூழ்கிய படகின் உச்சியை பிடித்து தத்தளித்து வந்த நிலையில் இருந்த பீயை அந்தப் பக்கமாக வந்த படகு ஒன்று காப்பாற்றியுள்ளது. அந்தப் கொள்கலன் படகில் இருந்தவர்கள் நீரில் நீந்தி வந்த பீயை மிதவையை எரிந்து காப்பற்றினர்.

தொடர்ந்து கடலோரக் காவர் படையினருக்கு தகவல் அளித்ததை அடுத்து அவர்கள் வந்து பீயை அழைத்துச் சென்றனர்.

பீயின் படகு கடந்த வெள்ளிக்கிழமை இரவே கோளாறுக்கு உள்ளாகி மூழ்க ஆரம்பித்துள்ளது. மூழ்கிய படகின் உச்சியை பிடித்து ஒருநாள் முழுவதும் அவர் உதவிக்காக நடுக்கடலில் காத்திருந்துள்ளார்.

Wed, 12/02/2020 - 13:04


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.