முதலாவது கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது

பிரித்தானியாவில் பைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து முதலாவதாக 90 வயதான பெண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

80 வயதிற்கு மேற்பட்டவர்கள், முன்னணி சுகாதார ஊழியர்கள் மற்றும் பராமரிப்பு இல்ல ஊழியர்களுக்கு குறித்த கொவிட் -19 தடுப்பூசி வழங்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது. அதன்படி ஐம்பது மருத்துவமனைகள் ஆரம்பத்தில் தடுப்பூசி வழங்குவதற்கான மையங்களாக தெரிவு செய்யப்பட்டு இருந்தன. குறிப்பாக இந்த வாரம் கிடைக்கும் 800,000 அளவு கொரோனா தடுப்பூசியின் முதலாவது ஊசியே 90 வயதான பெண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ளது. அத்தோடு இந்த மாத இறுதிக்குள் மேலும் 4 மில்லியன் வரை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

 

Wed, 12/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை