விமானத்தில் அணையாடை பயன்படுத்த சீனா அறிவுரை

கொவிட்–19 அபாயம் அதிகமுள்ள நாடுகளுக்குச் சென்று, வரும் விமானங்களில் செல்லும் விமானப் பணியாளர்கள் அணையாடை பயன்படுத்திக்கொள்ளுமாறும் கழிவறையைப் பயன்படுத்துவதைத் தடுப்பதன் மூலம் தொற்று பரவும் அபாயம் குறையும் எனவும் சீனாவின் விமானப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பு பரிந்துரைத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக விமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 38 பக்க வழிகாட்டிக் குறிப்பில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் மக்கள் தொகையில் ஒரு மில்லியனில் 500 பேருக்கு மேல் வைரஸ் தொற்று உள்ள பகுதிகளுக்குச் செல்லும் விமானச் சேவைகளுக்கு இந்தப் பரிந்துரைகள் பொருந்தும் என சீனாவின் விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்தது. மேலும், விமானத்தில் சுத்தமான பகுதி, இடைப்பட்ட பகுதி, பயணிகள் அமரும் பகுதி, தனிமைப்படுத்தப்படும் பகுதி என விமானத்தில் இருக்கைகள் பிரிக்கப்பட வேண்டும் எனவும் வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் உள்ளூர் விமானப் பயணங்கள் கொவிட்–19 க்கு முந்தைய நிலையை எட்டியிருந்தாலும் பல நாடுகள் கொவிட்–19 பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. 

Sat, 12/12/2020 - 09:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை