மன்னார் வளைகுடாவை கடக்கவுள்ள புரவி

மன்னார் வளைகுடாவை கடக்கவுள்ள புரவி-Burevi Cyclone-Emerge Into Gulf of Mannar by Noon

- பாதிப்பு எதிர்பார்த்ததை விட குறைவு

'புரவி' சூறாவளியானது, நேற்று (02) இரவு 10.30 மணி - 11.30 மணி இடைப்பட்ட காலப் பகுதியில் இலங்கையின் இலங்கையின் வடகிழக்கு கரையில் உள்ள திருகோணமலையின் திரியாய் மற்றும் குச்சவெளி இடையே இலங்கைக்குள் நுழைந்ததாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகி நகர்ந்து வரும் புரவி புயல் சின்னத்தின் காரணமாக, காற்றின் வேகம் மணிக்கு 70 -80 கி.மீ. வரை காணப்படும் எனவும், சில வேளைகளில் மணிக்கு 90 கி.மீ. வரை அதிகரிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

படிப்படியாக மேற்கு நோக்கியதாக வடமேல் திசையில் நகரும் புரவி சூறாவளி, இன்று (03) நண்பகல் அளவில் மன்னார் வளைகுடாவை அடையம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அடுத்த சில மணி நேரத்தில் சூறாவளியின் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வானிலை: மழை
வடக்கு, வட மத்திய, வடமேற்கு மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் ஒரு சில இடங்களில் 150மி.மீ. இற்கும் அதிக அடைமழை பெய்யவும் வாய்ப்பு காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் ஒரு சில நேரங்களில் இடைக்கிடை மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக, திணைக்களம் அறிவித்துள்ளது.

Thu, 12/03/2020 - 10:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை