ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு|| திட்டம்; கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்த ஆளுநர் உறுதி

ஆளுநர் அனுராதா யகம்பத் தலைமையில் நேற்று மாகாண அபிவிருத்தி திட்ட மாநாடு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கமைய நிலைபேறான அபிவிருத்தி திட்டங்களை கிழக்கு மாகாணத்தில் அமுல் நடத்துவதற்கு கிழக்கு மாகாண சபை நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

இம் மாகாணத்தில் அம் பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் அடங்குகின்றன. இம்மாவட்டங்களின் சுபீட்சத்திற்காக ஜனாதிபதியின் கொள்கை திட்டத்துக்கமைய அபிவிருத்தித் திட்டங்களை வகுக்கும் விசேட மகாநாடு நேற்று (16) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யகம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் துஷித பீ.வணிகசேகர, மட்டக்களப்பு மாவ ட்ட அரசாங்க அதிபர் கே கருணாகரன், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எஸ் பண்டார உட்பட மாகாண அமைச்சின் செயலாளர்கள், மாகாண திணைக் களங்களின் பணிப்பாளர்கள், மாவட்ட பணிப்பாளர்கள் உட்பட அரச திணைக்களங்களில் உயரதிகாரிகள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர் .

இந்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்து கிழக்கு மாகாண ஆளுநர் கருத்துரை வழங்குகையில், -ஜனாதிபதியின் தூர நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டம் இந்நாட்டில் வறுமையை ஒழிக்கவும் பின்தங்கிய பகுதிகளை அபிவிருத்தி செய்யவும் நாட்டுக்கு முன்னேற்றகரமான திட்டங்களை உருவாக்கவும் வழிவகுக்கின்றது.

இந்த உயரிய நோக்கம் கொண்ட இந்த சுபிட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் நிலைபேறான அபிவிருத்தி திட்டங்களை அமுல் நடத்துவதற்கு இந்த மாகாணங்களைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் இதனை முன்னுரிமை அடிப்படையில் அமுல் நடத்துவதற்கும் முன்வரவேண்டும் என கேட் டுக் கொண்டார்.

ஆளுநர் அனுராதா யகம்பத் தொடரந்தும் இங்கு கருத்து வழங்குகையில்;- பல்வேறு பயனுள்ள வளங்களை கொண்டுள்ள மாகாணம்தான் கிழக்கு மாகாணம். இந்த மாகாணத்தின் வளங்கள் இந் நாட்டின் அபிவிருத்திக்கு இதுவரை காலமும் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை.

இதனை கருத்தில் கொண்டு சுபீட்சத்தின் நோக்கு ஜனாதிபதியின் கொள்கை திட்டத்திற்கு அமைய நிலைபேறான அபிவிருத்தி திட்டங்களில் கிழக்கு மாகாணத்தின் அனைத்து வளங்களும் பயன்படுத்து வதற்கு வழி வகை செய்யப் படவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மட்டக்களப்பு சுழற்சி நிருபர்

 

 

Thu, 12/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை