கொரோனாவால் மரணிப்போரது இறுதிச் சடங்கு அரச செலவில்

ஜனாதிபதி கோட்டாபய அறிவுறுத்தல்

நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் இறுதிக் கிரியைகளை இடர் முகாமைத்துவ அமைச்சின் செலவில் முன்னெடுக்குமாறு, சுகாதார தரப்பினருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய , சவப்பெட்டிகளையும் இலவசமாக வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். மேலும், இனம், மதம் பேதமின்றி சகலருக்கும் அரச செலவில் இறுதிக் கிரியைகளை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளாரென, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா மரணங்களின் இறுதிக் கிரியைகளுக்கான செலவுகளை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக உறுதி செய்யப் பட்ட சடலங்களின் இறுதிக் கிரியைகளுக்கான செலவுகளை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஏற்றுக் கொள்ள வேண்டுமென ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Thu, 12/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை