வெளிநாட்டுக்கு கொரோனா நிவாரணம்: ட்ரம்ப் எதிர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொரோனா தொற்று பரவலை சமாளிக்கும் நோக்கமுள்ள நிவாரணத் திட்டத்தில் மாற்றங்கள் செய்வதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

900 பில்லியன் டொலர் மதிப்புள்ள நிவாரணத் திட்டத்துக்கு அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து அவர் அந்த அழைப்பை விடுத்தார்.

அந்த நிவாரண தீர்மானத்தை, ‘அவமானம்’ என்று வர்ணித்த அவர், திட்டத்தில் இடம்பெற்றுள்ள தேவையில்லாத அம்சங்களை நீக்கும்படி பாராளுமன்றத்தை வலியுறுத்தினார்.

கம்போடியா, மியன்மார், எகிப்து, பாகிஸ்தான் உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு உதவிசெய்யும் வகையில் திட்டம் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதற்கு மாறாக வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களுக்கான நேரடி நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

ஒரு தம்பதிக்கு 600 டொலர் என ஒதுக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையை, 2,000 அல்லது 4,000 டொலருக்கு உயர்த்த வேண்டும் என்றார் ட்ரம்ப்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது விருப்பத்தின்படி தீர்மானத்தை மாற்றி அமைக்க வேண்டும், இல்லாவிட்டால் அதைத் தமது தனிப்பட்ட ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்யப் போவதாகவும் அவர் மிரட்டினார். 

Thu, 12/24/2020 - 07:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை