தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் இருக்க ட்ரம்ப் தொடர்ந்து உறுதி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தமது தோல்வியை ஒருபோதும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை என டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். பெரிய அளவில் வாக்கு மோசடி நடந்திருப்பதாகக் கூறுவதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வி கண்ட பின்னர் பங்கேற்கும் முதல் தொலைக்காட்சி நேர்காணலில் ட்ரம்ப் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். ேர்தல் முடிவுகள் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டன என்றும், தேர்தலில் மோசடி நேர்ந்துள்ளது என்றும் பொக்ஸ் நியுஸ் தொலைக்காட்சியிடம் அவர் கூறினார்.

ஆனால் தமது குற்றச்சாட்டுகளுக்கு அவர் ஆதாரம் எதையும் முன்வைக்கவில்லை.

45 நிமிடம் நீடித்த அந்த நேர்காணலின் பெரும் பகுதியில் தேர்தல் பற்றிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையே அவர் முன்வைத்திருந்தார்.

அமெரிக்க தேர்தல் முறையின் நம்பகத்தன்மை குறித்து டிரம்பின் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் எதனையும் அவரின் சட்டக் குழுவும் இதுவரை முன்வைக்கவில்லை.

 

Tue, 12/01/2020 - 11:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை