குரோசியாவில் சக்திவாய்ந்த பூகம்பம்: எழுவர் உயிரிழப்பு

மத்திய குரோசியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவு சக்திவாய்ந்த பூகம்பத்தில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

கட்டட இடிபாடுகளை அகற்றி உயிர் தப்பியோரைத் தேடி மீட்பாளர்கள் இரவு முழுவதும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பெட்ரின்ஜாவில் 12 வயது சிறுமி ஒருவர் கொல்லப்பட்டதாக அந்த நகருக்கு வருகை தந்த பிரதமர் தெரிவித்தார்.

அருகாமை சிறு நகரான க்ளினாவில் ஐவர் கொல்லப்பட்டனர். சன்சினாவில் இருக்கும் தேவாலய இ,டிபாடுகளில் இருந்து உயிரிழந்த ஏழாவது நபரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டது.

பாதி நகரம் அழிந்திருப்பதாக குறிப்பிட்ட பேட்ரின்ஜா நகர மேயர், இடிபாடுகளில் இருந்து பலர் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

பூகம்பத்திற்குப் பின்னர் பல சிறு அதிர்வுகள் பதிவானதால் மக்கள் தமது வீடுகளுக்கு திரும்ப அஞ்சுகின்றனர். குரோஷியா முழுவதும் மட்டுமின்றி அண்டை நாடுகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. கிட்டத்தட்ட 400 கிலோமீற்றருக்கு அப்பால் இருக்கும் ஆஸ்திரியத் தலைநகர் வியன்னா வரை அதிர்வுகள் உணரப்பட்டன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குரோஷியா–ஸ்லோவேனியா எல்லைப் பகுதியில் உள்ள அணுவாலை ஒன்றை மூடும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Thu, 12/31/2020 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை