‘பைசர்’ தடுப்பு மருந்துக்கு அமெ. நிபுணர் குழு ஆதரவு

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு எதிரான முதல் தடுப்பு மருந்துக்கு அந்நாட்டின் உணவு, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர்க் குழு ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த நோய்ப் பரவலுக்கு எதிரான அமெரிக்காவின் போராட்டத்தில் அது ஒரு முக்கியப் படியாக அமையலாம். பைசர் நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசியை அவசரத் தேவைக்குப் பயன்படுத்த, நிபுணர் குழு உறுப்பினர்களில் 17 பேர் ஆதரவாகவும், 4 பேர் எதிராகவும் வாக்களித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அந்தத் தடுப்பு மருந்தைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய கடுமையான ஒவ்வாமை குறித்த பாதுகாப்பு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுமாறு, உணவு, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பைசர் நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டது.

அந்தத் தடுப்பு மருந்தைக் கர்ப்பிணிகள் பயன்படுத்தலாமா என்பது குறித்த தெளிவான தகவல் இல்லை என்பதையும் அது சுட்டிக்காட்டியது.

கனடா, பிரிட்டன், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு அடுத்து, அந்தத் தடுப்பூசியைப் பயன்படுத்தக்கூடிய நான்காவது நாடாக அமெரிக்கா விளங்கலாம்.

அந்தத் தடுப்பு மருந்தின் பயன்பாடு குறித்த விவகாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் பாராட்டினார்.

Sat, 12/12/2020 - 15:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை