ஆற்றல் துறை ஒத்துழைப்பு: இந்தியா–நேபாளம் ஆராய்வு

இந்தியா மற்றும் நேபாள நாடுகளுக்கு இடையிலான ஆற்றல் துறை ஒத்துழைப்பு செயலாளர் மட்ட செயற்குழுக் கூட்டம் வீடியோ கொன்பிரன்ஸ் வழியாக இடம்பெற்றுள்ளது.

கடந்த வாரம் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் இரு நாடுகளினதும் நீர் மற்றும் சூரிய சக்தித் துறைகளுக்கான சந்தை வாய்ப்புகள் பற்றி முக்கியமாக ஆராயப்பட்டது.

‘ஆற்றல் துறை ஒத்துழைப்புத் தொடர்பான செயற்குழுவின் 8ஆவது சந்திப்பு வீடியோ கொன்விரன்ஸ் வாயிலாக ஆரம்பிக்கப்பட்டது’ என்று நேபாளத்தின் இந்திய தூதரகம் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது. ‘மின்சார விநியோக கூட்டிணைப்பு, நேபாள மிகை ஆற்றலுக்கான சந்தையை அணுகல் மற்றும் நீர் மற்றும் சூரியசக்தி துறைகளில் இந்தியா முதலீடு செயதல் உட்பட முக்கிய விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது’ என்று மற்றொரு ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த நவம்பர் ஆரம்பத்தில் ரயில் போக்குவரத்து தொடர்பில் இந்தியா மற்றும் நேபாள கூட்டு செயற்குழு சந்தித்து நாடுகளுக்கு இடையிலான ரயில் இணைப்பு தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டிருந்தது.

Tue, 12/15/2020 - 11:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை