நைஜீரியா: துப்பாக்கிதாரிகளின் தாக்குதலில் மாணவர்கள் மாயம்

வட மேற்கு நைஜீரியாவில் இரண்டாம் நிலை பாடசாலை ஒன்றின் மீது துப்பாக்கிதாரிகள் நடத்திய சுற்றிவளைப்பை அடுத்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் காணாமல்போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மோட்டார் சைக்கிள்களில் வந்த தாக்குதல்தாரிகள் வானை நோக்கி சுட ஆரம்பித்ததை அடுத்து மக்கள் சிதறி ஓடத் தொடங்கினர் என்று சம்பவத்தை பார்த்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கட்சினா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் அரச பாடசாலை ஒன்றே இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிதாரிகள் மறைந்திருக்கும் இடத்தை கண்டுபிடித்ததாகவும் அங்கு துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றதாகவும் இராணுவம் கடந்த சனிக்கிழமை கூறியது.

எனினும் இதில் ஏற்பட்ட முன்னேற்றம் பற்றி உறுதி செய்யப்படவில்லை என்பதோடு மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் எந்த செய்தியும் வெளியாகவில்லை. காணாமல்போன மாணவர்களின் எண்ணிக்கையை கண்டறியும்படி நைஜீரிய ஜனாதிபதி முஹமது புஹாரி உத்தரவிட்டுள்ளார். பல மாணவர்கள் துப்பாக்கிதாரிகளால் எடுத்துச் செல்லப்பட்டதாக சாட்சியங்கள் கூறியுள்ளன.

Mon, 12/14/2020 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை