ஒவ்வாமை உள்ளவர்களுக்கு பைசர் தடுப்பு மருந்து வழங்கப்படாது

கடுமையான ஒவ்வாமை உடையவர்களுக்கு பைசர் – பயோஎன்டெக் தடுப்பு மருந்து வழங்கப்படமாட்டாது என்று பிரிட்டனின் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

தடுப்புமருந்து போடப்பட்ட முதல் நாளில் இருவருக்குக் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டது.

இரு சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கையாக, ஒவ்வாமை ஏற்படும் சாத்தியமுள்ளவர்கள் தடுப்புமருந்தைப் பெறமாட்டார்கள் என்று கூறப்பட்டது.

இருவரது உடல்நிலையும் தற்போது சீராய் இருப்பதாகக் கூறப்பட்டது.

இதன்படி யாருக்கேனும் சில மருந்துகளை செலுத்திக் கொண்டாலோ, உணவாலோ ஒவ்வாமை ஏற்படும் என்று தெரிந்திருந்தால், அவர்கள் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதில்லாமல், கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்பவர்கள் சிலருக்கு காய்ச்சல், தலைவலி, மூட்டுவலி போன்ற ஒவ்வாமைகள் ஏற்படும். அது வழக்கமானதுதான் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வாமை குறித்து மேலும் தகவலை ஆணையம் கோரியுள்ளது. அதற்கு பைசர் – பயோஎன்டெக் நிறுவனங்கள் உதவிவருகின்றன. உலகில் தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் வழங்கிய முதல் நாடு பிரிட்டன்.

மற்ற நாடுகள் தற்போது தடுப்புமருந்துகளைச் சோதித்து வருகின்றன. கடைசிக் கட்டச் சோதனைகளில் கடுமையான ஒவ்வாமை உள்ளவர்கள் சேர்க்கப்படவில்லை என்று பைசர் தெரிவித்தது. தடுப்பு மருந்தின் பாதுகாப்பு ஆராயப்பட்டபோது சோதனைகளை மேற்கொண்ட 0.63 வீதமான நபர்களுக்கு மட்டுமே ஒவ்வாமை ஏற்படும் சாத்தியம் கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது ஒவ்வாமை குறித்து விரைவாக தெரியவந்திருப்பதால் இது குறித்துக் கட்டுப்பாட்டு ஆணையம் முன்னெச்சரிகை அறிவிப்புகளை விடுக்க முடியும்.

இது தடுப்புமருந்தின் பலன் சரியாகக் கண்காணிக்கப்படுவதைக் காட்டுவதாக நிபுணர்கள் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் நம்பிக்கை தெரிவித்தனர்.

 

Fri, 12/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை