Header Ads

திருகோணமலை கல்வி வலய பாடசாலைகளுக்கு பூட்டு

திருகோணமலை கல்வி வலய பாடசாலைகளுக்கு பூட்டு-Trincomalee Educational Zone Schools Closed-EP Governor Anuradha Yahampath

- இறைச்சிக்கடை சென்றவர்கள் தொடர்பு கொள்ளவும்

திருகோணமலை கல்வி வலய பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாளை (21) முதல் மறு அறிவித்தல் வரை இவ்வாறு பாடசாலைகளை மூடுவதற்கு, கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

திருகோணமலை நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 15 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இறைச்சிகடை சென்றவர்கள் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்

திருகோணமலை மின்சார நிலைய வீதியில் உள்ள இறைச்சிக்கடை மற்றும் கோழி இறைச்சி கடைக்கு சென்றவர்கள் சுகாதார வைத்திய அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ. பிரேமானந் இன்று (30) இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

திருகோணமலை மின்சார நிலைய வீதி கோழி இறைச்சிக் கடையில் வேலை செய்த ஜமாலியா, துளசிபுரம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த 22 மற்றும் 40 வயது உடைய இருவருக்கு இன்று  20ம் திகதி அன்டிஜென் பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை கோழிக் கடை மற்றும் இறைச்சிக்  கடைகளுக்கு சென்றவர்கள் உப்புவெளி  பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கோ அல்லது திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கோ இல்லாவிட்டால் தங்களது அருகில் உள்ள பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்குமாறும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ. பிரேமானந் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவர்களுக்கு நேற்றையதினம் (19) PCR பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(ரொட்டவெவ குறூப் நிருபர்)

Sun, 12/20/2020 - 21:48


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.