அறிக்கை கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை

மஹர சம்பவம் தொடர்பில் நீதியமைச்சர்

விசாரணைக் குழுவின் அறிக்கைக்கமைவாக எதிர்காலத்தில் மஹர சிறைச்சாலையில் நடந்தது போன்ற சம்பவங்கள் இனி நடக்காதிருக்க விசேட திட்டம் முன்னெடுப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

கைதிகளின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்வதாக கூறிய அவர், சிறைச்சாலைகளிலுள்ள நெரிசலை குறைக்க பல திட்டங்கள் முன்னெடுக்கப் பட்டிருப்பதாகவும் கூறினார்.

அநுர குமார எம்.பி 27/2 நிலையியற் கட்டளையின் கீழ் எழுப்பியிருந்த கேள்விக்குப் பதிலளித்த அவர், மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

2020 .11.29 ஆம் திகதி புள்ளி விபரப்படி 28, 541 பேர் சிறைகளில் இருந்தனர். இதில் 20,723 விளக்கமறியல் கைதிகள் என்பதோடு 7,818 தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளாகும்.

மஹர சிறையில் 2,891 கைதிகள் இருந்ததோடு அதில் 2,059 பேர் விளக்கமறியல் கைதிகளாகும் 732 தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளாகும்.

11 பேர் இறந்ததோடு 106 பேர் காயமடைந்துள்ளனர். 53 பேர் மீள மஹர சிறைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலை திணைக்களம் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியிட்டுள்ளது. சம்பவ தினம் கைதிகளுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து ஆராய நான் விசாரணை குழுவொன்றை நியமித்துள்ளேன்.

சிறைச்சாலை ஆணையாளரும் குழுவொன்றை நியமித்துள்ளார்.

ஒரு மாதத்தில் முழு அறிக்கை தர உள்ளது. நான் நியமித்த குழு நேற்று மஹர சிறைக்கு சென்று ஆராய்துள்ளது.

கைதிகளின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குழுவின் பரிந்துரைக்கமைய எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாதிருக்க முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும். சிறைக்கைதிகளுக்கு 11,500 பீசீஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளன.ரெபிட் என்டிஜன் பரிசோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஷம்ஸ் பாஹிம், நிசாந்தன் சுப்பிரமணியம்

Fri, 12/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை