மீண்டும் பாராளுமன்றம் கூடும் நாளில் அரசின் உரிய பதில்

சபையில் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன

 

கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்யும் விடயம் தொடர்பில் உரிய பதிலை மீண்டும் பாராளுமன்றம் கூடும் நாளில் அளிப்பதாக வெளிவிவகார அமைச்சரும் சபை முதல்வருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் சடலங்களை அடக்கும் உரிமையும் அரசாங்கம் வழங்க வேண்டுமென 27/2 கீழ் கேள்வியெழுப்பிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பிக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

இதேவேளை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியின் கேள்வியின் பின்னர் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த முஸ்லிம் எம்.பிகளும் ஏனைய எம்.பிகளும் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அரசாங்க அனுமதி வழங்க வேண்டுமென கூச்சலிட்டிருந்தனர்.

 

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 12/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை