ஜனாஸாக்களை மாலைதீவில் நல்லடக்கம் செய்வது முஸ்லிம்களின் வேண்டுகோள் அல்ல

- அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்தீஹார்

இலங்கை மண்ணில் பிறந்து இதே மண்ணில் வளர்ந்து மரணிக்கும் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை கடல் கடந்து மாலைத்தீவில் நல்லடக்கம் செய்ய வேண்டுமென்பது முஸ்லிம்களின் வேண்டுகோள் அல்ல என அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்தீஹார் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கும்போது, 

ஜனாஸாக்களின் உரிமையாளர்களின் விருப்புக்கள் இல்லாமல் பெரும் வெறுப்புக்களுக்கு மத்தியில் பலவந்தமாக எரிக்கப்படுகின்றன. இன்று 24 மணிநேரமும் உலகில் ஒவ்வொரு மூலைமுடுக்குகளிலும் இலங்கை அரசாங்கத்தின் பலவந்த கொள்கைக்கு எதிர்ப்பு கணைகள் ஓங்கி வருகின்றது. இது நாளாந்தம் பலதரப்பட்ட ஊடகங்கள் மூலமாக அவதானிக்க முடிகின்றது. இந்நாட்டு முஸ்லிம்கள் மீது வஞ்சம் தீர்க்கும் நோக்குடன் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒரு சில இனவாத சக்திகளின் மனங்களை சந்தோஷபடுத்த வேண்டுமென்ற குறுகிய நோக்கத்தோடும் செயற்படுகின்றது. தலைமைத்துவங்கள் நடந்து கொள்ளும் தப்பான போக்கினை முழு உலகமுமே கவனித்து கொண்டிருக்கிறது என அவர் தெரிவித்தார்.

உக்குவளை விஷேட நிருபர்

Wed, 12/23/2020 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை