வடகீழ் பருவப் பெயர்ச்சி நிலை; வடக்கு, கிழக்கில் மழை

வடகீழ் பருவப் பெயர்ச்சி நிலை; வடக்கு, கிழக்கில் மழை-Northeast Monsoon Conditions-Showers or Thundershowers-North-East

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சி நிலைமை உருவாகியுள்ளது.

அதற்கமைய, வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை , அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும்சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கி.மீ. வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Sun, 12/20/2020 - 10:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை