அரசியல் இழுபறிக்கு மத்தியில் நேபாள பாராளுமன்றம் கலைப்பு

நேபாள பாராளுமன்றம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கலைக்கப்பட்ட நிலையில் அந்நாட்டில் அடுத்தஆண்டு பொதுத் தேர்தல் இடம்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் என பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி தலைமையிலான அமைச்சரவை கோரியதை அடுத்து குடியரசுத் தலைவர் வித்யா தேவி பண்டாரி பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் கே.பி.ஷர்மா ஒலிக்கும், ஆளும் நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே அண்மையில் கருத்து வேறுபாடு தீவிரமடைந்துள்ளது. வைரஸ் பரவலைச் சரியாகக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டையும் பிரதமர் எதிர்நோக்கியுள்ளார்.நே பாளத்தில் 250,000 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. 1,700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அடுத்த ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நேபாளத்தில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக வழக்குகளுக்கு முகம்கொடுக்க வாய்ப்பு இருப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

Tue, 12/22/2020 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை