பசில் ராஜபக்‌ஷ பாராளுமன்றம் செல்வது காலத்தின் தேவையே

- பொதுஜன பெரமுன அமைப்பாளர் அஸ்வர் உதுமாலெப்பை

நாட்டின் அபிவிருத்தியை கருத்திற் கொண்டும் சிறுபான்மை மக்களின் செயற்பாடுகள் கருதியும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ பாராளுமன்றம் செல்வது காலத்தின் தேவை என சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான அஸ்வர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ஒரு இலட்சம் கிலோமீற்றர் தூர கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் 3 கிலோமீற்றர் நீளமான சம்மாந்துறை- 04 மலையடி கிராம வண்டுவாய்க்கால் வீதியின் ஆரம்ப விழாவின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த வாய்க்கால் வீதி நீண்டகாலமாக கவனிப்பாரற்றுக் கிடந்தது. இந்த வாய்க்கால் வீதியை திருத்தித்தருமாறு இப்பிரதேசத்தின் கடந்த கால அரசியல் தலைமைகளிடம் பலமுறை விடுக்கப்பட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே அஸ்வர் உதுமாலெப்பையின் முயற்சியினால் இதற்கான நிதி கிடைத்துள்ளது. சுமார் 23 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவிருக்கும் இவ்வேலைத்திட்டத்திற்கான ஆரம்ப வேலைகளை தொகுதி அமைப்பாளர் அஸ்வர் உதுமாலெப்பையினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய பணிப்பாளர் ஏ.எல்.ஏ.பாரி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

(அம்பாறை மத்திய குறூப் நிருபர்)

Sat, 12/05/2020 - 13:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை