பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவியாக அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவராக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட்19 நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஒன்றியத்தின் பிரதித் தலைவர்களாக திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கல் இராஜாங்க அமைச்சர் டாக்டர் சீதா அரம்பேபொல மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் முதலாவது கூட்டம் பாராளுமன்ற கட்டட தொகுதியில் நடைபெற்ற போதே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான தலதா அத்துகோரள, ஹரிணி அமரசூரிய, டயனா கமகே, கோகிலா குணவர்தன, மஞ்சுளா திசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர். பாராளுமன்றத்திலும் மற்றும் பொதுவாகவும் இலங்கையில் அரசியலில் பெண் பிரதிநிதிதித்துவத்தை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது கலந்துரையாடினர். அதற்காக, அரசியல் ரீதியாகவும் மனப்பாங்கு ரீதியாகவும் சமூகத்தை விழிப்பூட்டும் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க வேண்டும் என அனைத்து உறுப்பினர்களுக்கும் இணக்கம் தெரிவித்தனர்.

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் போது பெண்கள் தொடர்பில் முன்வைக்க வேண்டிய யோசனைகள் தொடர்பில் எதிர்காலத்தில் செயற்பட தீர்மானிக்கப்பட்டது.

Tue, 12/15/2020 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை