ஜனாஸாக்களை அடக்கம் செய்ய இரண்டு இடங்கள் பரிந்துரை

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு

கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக இரண்டு இடங்களை பரிந்துரை செய்திருப்பதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பான அறிக்கை ஒன்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதன்படி மன்னார் மறிச்சுக்கட்டி மற்றும் கிழக்கு இறக்காமம் என இரண்டு பிரதேசங்கள் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றன. இதனிடையில் சுகாதார துறையினர் இந்த இரண்டு இடங்களிலும் எந்த இடத்தில் கொரோனாவினால் மரணமாகும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய வேண்டும் என தீர்மானிக்க முடியும் என்பதை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இதேவேளை இலங்கையில் தொடர்ந்தும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் முகமாக கொரோனாவினால் மரணமாகும் உடலங்களை தகனம் செய்வதே சிறந்தது என பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ருகுணு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் யூ.சி.பி. பெரேரா மற்றும் ருகுணு பலகலைக்கழகத்தில் மற்றுமொரு பேராசிரியர் பிரியந்தயாப்பா ஆகியோர் இந்த பரிந்துரைகளை விடுத்திருக்கின்றன. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட உடலங்களை மண்ணுக்குள் அடக்கம் செய்ததன் பின்னர் அதிலுள்ள வைரஸ் எவ்வளவு காலம் உயிர் வாழும் என்பது தொடர்பில் இன்னும் கண்டறியப்படவில்லை.

எனவே நீண்டகால அடிப்படையில் கொரோனாவினால் மரணமான உடலங்களை தகனம் செய்வதே சிறந்தது என இந்த இரண்டு பேராசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 12/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை