கொரோனா தடுப்பூசி திட்டம் ரஷ்யத் தலைநகரில் ஆரம்பம்

ரஷ்யத் தலைநகா் மொஸ்கோவில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக மருத்துவா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட நோய்த்தொற்று அபாயம் அதிகம் உள்ளவா்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

ரஷ்யா உருவாக்கியுள்ள ‘ஸ்புட்னிக்–5 ’ கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்தும் திட்டத்தை ஒரு வாரத்துக்குள் ஆரம்பிக்க வேண்டும் என்று அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை இந்தப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக மொஸ்கோவில் 70 கொரோனா தடுப்பூசி முகாம்களை அமைக்கப்பட்டுள்ளன. நாட்டில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் நான்கில் ஒரு பங்கினர் மொஸ்கோ நகரிலேயே உள்ளனர்.

ரஷ்யா உருவாக்கியுள்ள ஸ்புட்னிக்–5 கொரோனா தடுப்பூசி, உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த பாதுகாப்பு, தர, செயல்திறன் பரிசோதனைக் கட்டங்களை முழுமையாகத் தாண்டுவதற்கு முன்னரே பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அந்த நாட்டு மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு கடந்த ஓகஸ்ட் மாதம் அங்கீகரித்தது.

Mon, 12/07/2020 - 16:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை