வீடியோ தொழில் நுட்பத்தில் அமைச்சரவைக் கூட்டம்

ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் (30) வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெற்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷஜனாதிபதி அலுவலகத்தில் இருந்தும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, விஜேராம மாவத்தையிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்தும் அமைச்சர்கள் தங்களது அலுவலகங்களிலிருந்தும் அமைச்சரவை கூட்டத்தில் பங்குபற்றினர்.

கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியிலும் நாட்டின் அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்க்கை நிலை தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய தீர்மானங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, அபிவிருத்தி நடவடிக்கைகளை முறையாக செயற்பாட்டு ரீதியில் முன்னோக்கி கொண்டு செல்லும் நோக்கில் இந்த அமைச்சரவை கூட்டம் இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது.

கொவிட் 19 தொற்றுநோய் மட்டுமல்லாமல் செயல்திறன், வசதி, நேரம் மற்றும் செலவை மீதப்படுத்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் வீடியோ தொழில் நுட்பத்துடனான அமைச்சரவைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கும் பயன்படுத்துவதற்கும் அதற்குப் பழக்கப்படுத்துவதற்கும் ஜனாதிபதி, முன்னுரிமை அளித்துள்ளார். இது “சபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்திலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதி அண்மையில் தொழில்நுட்ப அமைச்சை தனது கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்தார்.

 

Wed, 12/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை