உலக வங்கியுடன் இந்தியா ஒப்பந்தம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழைகளைப் பாதுகாக்கும் வகையில் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கும் ஒப்பந்தத்தில் இந்தியாவும், உலக வங்கியும் கையெழுத்திட்டுள்ளன.

கடந்த மே மாதத்தில் 750 மில்லியன் டொலர்களுக்கான செயல்பாடுகள் அங்கீகரிக்கப்பட்டதால் தற்போது 2ஆம் கட்டமாக இந்தத் தொகை வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் மூலம் இந்தியாவில் உள்ள ஏழைகளின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து ஏழைக்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு போதுமான சமூக பாதுகாப்பை வழங்கல் மற்றும் இந்தியாவில் மாநில மற்றும் தேசிய அரசுகளுக்கு அதற்கான திறனை இந்தத் திட்டம் வழங்கும் என்று அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா சார்பாக டொக்டர் மொஹாபத்ராவும், உலக வங்கி சார்பாக இந்தியாவின் செயல் இயக்குநர் சுமிலா குல்யானியும் கையெழுத்திட்டனர்.

Mon, 12/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை