டல்ஜித் அலுவிஹாரே பதவி நீக்கம்; அதிவிசேட வர்த்தமானி

டல்ஜித் அலுவிஹாரே பதவி நீக்கம்; அதிவிசேட வர்த்தமானி-Matale Mayor Daljith Aluvihare Removed From His Post-Extraordinary Gazette

டல்ஜித் அலுவிஹாரே மாத்தளை மாநகரசபை  முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று (02) முதல் அமுலுக்கு வரும் வகையில்,  மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவினால் அவரது பதவி நீக்கம் தொடர்பான குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மாத்தளை மாநகரசபை  முதல்வர் டல்ஜித் அலுவிஹாரே மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க மத்திய மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைகுழுவின் அறிக்கை மத்திய மாகாண ஆளுநரிடம் கடந்த 24ஆம் திகதி  கிடைக்கப்பெற்றிருந்தன.

அதன்படி, சம்பந்தப்பட்ட அறிக்கையில் உள்ள உண்மைகளின் அடிப்படையில்,  மாநகர மன்ற கட்டளைச் சட்டத்தின் (அதிகாரம் 252) 277 (I) (அ), (சி) (ஈ) மற்றும் (இ) பிரிவுகளில் படி மாத்தளை மாநகர  சபையின் முதல்வர் தனது கடமைகளையும் செயல்பாடுகளையும் நிறைவேற்ற முடியாது என, குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்படுகின்றன.

மாத்தளை மாநகரசபை  முதல்வரின் நடவடிக்கைகள்  தொடர்பாக மத்தியமாகாண  ஆளுநருக்கு  கிடைக்கப்பெற்ற   முறைப்பாடுகள்  குறித்து, அதனை  விசாரிக்க மத்திய மாகாண ஆளுநர 3 மாதங்களுக்கு முன்பு ஆளுநரினால் விசேட வர்த்தமான அறிவித்தலொன்று வெளியிடப்பட்டிருந்தன எனவும் அதனடிப்படையில்  முதல்வருக்கெதிரான முறைப்பாடுகளை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும் பொருட்டு, ஆளுநரினால் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன தலைமையில் ஒரு சுயாதீன ஆணைக் குழுவொன்று  நியமிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து மாத்தளை மாநகர முதல்வருக்கான அதிகாரங்களை நிறைவேற்ற, பிரதி முதல்வர் சந்தனம் பிரகாஷ் தற்காலிகமாக  ஆளுநரினால் நியமிக்கப்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எம்.ஏ. அமீனுல்லா

Thu, 12/03/2020 - 12:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை