புதிய கொரோனா திரிபு பல நாடுகளிலும் பரவல்

பிரிட்டனில் முதல்முறை கண்டுபிடிக்கப்பட்ட வேகமாக பரவக்கூடிய கொரோனா வைரஸின் புதிய திரிபு பல ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா, ஜப்பானிலும் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, சுவீடன் மற்றும் பிரான்சில் பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் இருந்து உருமாற்றம் பெற்ற இந்த கொவிட்–19 தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

கனடாவின் ஒன்டாரியோவைச் சேர்ந்த தம்பதிக்கு இந்த திரிபு இருப்பது அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்கள் பயணம் மேற்கொண்ட இடங்கள் மற்றும் தொற்று ஏற்படும் அச்சுறுத்தல் அதிகம் உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை தொடக்கம் குடியுரிமை அற்ற வெளிநாட்டினர் நாட்டுக்கு வருவதற்கு ஜப்பான் ஒரு மாதம் தடை விதித்துள்ளது. ஜப்பானில், பிரிட்டனில் இருந்து வந்த ஐவருக்கு இந்த நோய் திரிபு இருப்பது அடையாளம் காணப்பட்ட நிலையில் அதனை ஒட்டி மேலும் இரு தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதில் ஒன்று உள்நாட்டில் பரவியதாகும்.

கொரோனா தொற்றின் மரபு மாற்றம் பெற்ற இந்த புதிய திரிபு பற்றிய செய்தியை அடுத்து உலகின் பல நாடுகளிலும் பயணக்கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸின் புதிய திரிபு முந்தையை திரிபுகளை விட அதிவேகமாகப் பரவுகிறது. ஆனால் புதிய திரிபு பரவியவர்களுக்கு எந்த வித கூடுதல் அபாயங்களும் இல்லை என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். மற்ற ரக கொரோனா வைரஸை விட இந்த புதிய ரக கொரோனா வைரஸ் சுமாராக 70 வீதம் கூடுதலாக பரவலாம்.

Mon, 12/28/2020 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை