லண்டனில் இலங்கை தூதரகம் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழக்கும் முஸ்லிம்களின் கட்டாய தகனங்களுக்கு எதிராக லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் முன் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தின் போது ஏராளமானோர் உயர் ஸ்தானிகராலயத்திற்கு வெளியே கூடி பதாதைகளை ஏந்தி போராடினர். கொழும்பில் அதிகாரிகளால் தகனம் செய்யப்பட்டவர்களில் 20 நாள் குழந்தையின் படங்களையும் போராட்டக்காரர்கள் இதன்போது காட்சிப்படுத்தியிருந்தனர்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தகனங்களை கட்டாயப்படுத்த இலங்கை அரசு எடுத்த முடிவு குறித்து அக்கறை இருப்பதாக பிரித்தானியா அரசு முன்தாக கூறியிருந்தது,

மேலும் இது இலங்கை முஸ்லிம்கள் மற்றும் பிற நம்பிக்கை சமூகங்களுக்கு ஏற்படுத்தும் குறிப்பிட்ட தாக்கத்தை அங்கீகரிக்கிறது.

தெற்காசிய இராஜாங்க அமைச்சரும், மனித உரிமைகளுக்கு பொறுப்பான அமைச்சருமான அஹ்மத், இது குறித்து நேரடியாக இலங்கை உயர் ஸ்தானிகரிடம் கவலை தெரிவித்துள்ளார். அனைத்து மதக் குழுக்களும் தங்கள் சடங்குகளை கடைபிடிக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காக, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி, எவ்வாறு பாதுகாப்பான வடிவத்தில் தொடர்ந்து இயங்க முடியும் என்பது குறித்து இலங்கை அரசாங்கத்துடன் வழிகாட்டுதல்களைப் பகிர்ந்து கொண்டதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

இந்த முக்கியமான பிரச்சினையில் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

 

Mon, 12/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை