உலக நாடுகளுக்கான தடுப்பூசி திட்டம் தோல்வியுறும் நெருக்கடி

 

உலக சுகாதார அமைப்பின் கொவக்ஸ் எனும் தடுப்புமருந்து ஒதுக்கீட்டுத் திட்டம் தோல்வியடைய அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் தடுப்பு மருந்துகள் நியாயமாகவும் சிறந்த முறையிலும் விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்த கொவக்ஸ் திட்டம் வகைசெய்கிறது.

இருப்பினும் நிதிப் பற்றாக்குறை, விநியோகத் தடங்கல், குழப்பமிக்க ஒப்பந்த ஏற்பாடுகள் ஆகியவற்றை அந்தத் திட்டம் எதிர்நோக்குவதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

இதனால், பில்லியன் கணக்கானோருக்கு 2024ஆம் ஆண்டுவரை தடுப்பூசிகள் கிடைக்காமல் போகக்கூடும். கொவக்ஸ் திட்டம் மலிவான தடுப்புமருந்துகளைப் பெறும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதில் பைசர், பொடர்னா நிறுவனங்களின் தயாரிப்புகள் இடம்பெறவில்லை.

இப்போதைக்கு, மூன்று நிறுவனங்களிடமிருந்து 400 மில்லியன் முறை போடத் தேவையான தடுப்பூசிகளின் விநியோகத்தை உறுதிசெய்யும் உடன்பாடுகள் செய்துகொள்ளப்பட்டுள்ளன.

ஆனால், அந்த மூன்று நிறுவனங்களின் தடுப்பூசிச் சோதனைகளுமே தாமதமடைந்துள்ளன. ஆகவே, அந்த உடன்பாடுகள் எவ்வளவு தூரம் பயனளிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. 

Fri, 12/18/2020 - 11:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை