துபாயில் தடுப்பு மருந்து போடும் பணி ஆரம்பம்

துபாயில் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பு மருந்து போடும் பணிகள் கடந்த புதன்கிழமை முதல் ஆரம்ப மாகியுள்ளன.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாகக் கொரோனா தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பைசர் - ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த தடுப்பு மருந்து இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

தடுப்பூசி போடும் பணிகள் கடந்த செவ்வாய் முதல் தொடங்கி நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்து கொரோனாவைத் தடுப்பதில் 95 வீதம் செயல்திறன் மிக்கது எனச் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பு மருந்து போடப்படும் என்று துபாய் சுகாதார நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வர்த்தக மையமாக இருக்கும் துபாயின் சுற்றுலா, வர்த்தகத் துறைகள் கொரோனா தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரத்தில் முதல் அரபு நாடாக சவுதி அரேபியாவில் தடுப்பு மருந்து செலுத்தும் பணி ஆரம்பமானது.

Fri, 12/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை