கொழும்பின் பல பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்

கொழும்பின் பல பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்-Isolation Status Update-Dec 06

- சில பகுதிகள் நாளை விடுவிப்பு
- மேலும் சில பகுதிகள் புதிதாக தனிமைப்படுத்தல்

கொவிட்-19 பரவலைத் தொடர்ந்து கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பல பிரதேசங்கள் நாளை (07) விடுவிக்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட ஏனைய பகுதிகள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகள், மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என, ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய...

கொழும்பு மாவட்டம்
தொடர்ந்தும் தனிமைப்படுத்தபடும் பொலிஸ் பிரிவுகள்

  • மருதானை
  • மாளிகாவத்தை
  • தெமட்டகொடை
  • கிராண்ட்பாஸ்
  • முகத்துவாரம்
  • கொட்டாஞ்சேனை
  • ஆட்டுப்பட்டித்தெரு
  • டாம் வீதி
  • வாழைத்தோட்டம்

கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்

  • கொம்பனித்தெரு: வேகந்த
  • பொரளை: வனாத்தமுல்ல
  • வெல்லம்பிட்டி: சாலமுல்ல

குடியிருப்பு தொகுதிகள்

  • வெல்லம்பிட்டி: லக்சந்த செவன
  • மட்டக்குளி: ரந்திய உயன, பெர்குசன் வீதி தெற்கு பகுதி

நாளை மு.ப. 5.00 மணி முதல் விடுவிக்கப்படும் பொலிஸ் பிரிவுகள்:

  • ப்ளூமெண்டல்

கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்

  • வெல்லம்பிட்டி: விஜயபுர

கம்பஹா மாவட்டம்
நாளை மு.ப. 5.00 மணி முதல் விடுவிக்கப்படும் பொலிஸ் பிரிவுகள்:

  • களனி
  • பேலியகொட பொலிஸ் பிரிவு (கீழுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தவிர்ந்த)
  • வத்தளை பொலிஸ் பிரிவு (கீழுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தவிர்ந்த)

புதிதாக தனிமைப்படுத்தப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்:
வத்தளை பொலிஸ் பிரிவு

  • கெரவலப்பிட்டி
  • ஹேகித்த
  • குருந்துஹேன
  • எவரிவத்த
  • வெலிகடமுல்ல

பேலியகொடை பொலிஸ் பிரிவு

  • பேலியகொடவத்த
  • பேலியகொட கங்கபட
  • மீகஹவத்த
  • பட்டிய வடக்கு

கிரிபத்கொடை பொலிஸ் பிரிவு

  • வெலேகொட வடக்கு
Sun, 12/06/2020 - 15:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை