சீனாவில் கத்திக் குத்து தாக்குதல்: எழுவர் பலி

வட கிழக்கு சீனாவில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதல் சம்பவம் ஒன்றில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லியாவோனிங் மாகாணத்தின் சிறிய நகரான கையுவாங்கில் இடம்பெற்றிருக்கும் இந்த சம்பவத்தில் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

சந்தேக நபரை பொலிஸார் கைது செய்ததாக சீன அரச ஊடகமான சின்ஹவ் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை.

சந்தேக நபரை பிடிக்கும் போராட்டத்தில் ஒரு பொலிஸ் அதிகாரியும் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆடவர் ஒருவர் கண்ணில்பட்டவர்களை எல்லாம் கத்தியால் குத்தியதாக சம்பவத்தை பார்த்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவில் வன்முறைக் குற்றங்கள் அரிதாக இருந்தபோதும் அண்மைய ஆண்டுகளில் இவ்வாறான கத்திக் குத்து தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

மனநலம் பாதிக்க ப்பட்டவர்களுக்கான சிகிச்சை இல்லங்கள் அல்லது அதிகாரிகள் அல்லது தனி நபர்களை பழிவாங்குவதற்காக இவ்வாறான தாக்குதல்களில் ஈடுபடுவது வழமையாகியுள்ளது.

 

Tue, 12/29/2020 - 16:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை