அநுராதபுர பகுதியில் படைப்புழு தாக்கம் குறித்து நேரடியாக சென்று பார்வை
சோளப் பயிர்ச்செய்கையில் படைப்புழுக்களின் தாக்கம் அதிகரித்திருப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேரடியாக சென்று பார்வையிடுவதற்காக அநுராதபுரம், பஹலகம என்ற இடத்திற்கு (26) அதிகாலை கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இங்கு படைப்புகளின் தாக்கத்தால் அழிவடைந்து கிடக்கும் சோளப் பயிர்ச்செய்கையை நேரடியாக அவதானித்தார்.
படைப்புழுக்களின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக விவசாயிகளின் சோளப் பயிர்ச்செய்கை பெரிதும் அழிவடைந்தன.
அதேபோன்று இவ்வருடமும் படைப்புழுக்களின் தாக்கம் காரணமாக சோளப் பயிர்ச்செய்கை விளைநிலங்கள் பாரிய அழிவை சந்தித்துள்ளன. இதனால் எதிர்பார்த்த அறுவடையை பெற முடியாது போயுள்ளதென விவசாயிகள் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
அதே போன்று தமது விளை நிலங்களுக்கு காட்டு யானைகளால் ஏற்படும் அச்சுறுத்தல் தொடர்பாகவும் விவசாயிகள் இதன்போது ஜனாதிபதிக்கு எடுத்துரைத்தனர்.
தங்களது விளைநிலங்களுக்கு நேரடியாக வந்து படைப்புழுக்களின் தாக்கம் தொடர்பாக அவதானித்தமைக்கு ஜனாதிபதிக்கு விவசாயிகள் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர். அனுராதபுரம் மிரிஸ்சவெட்டிய விஹாராதிபதி வன ஈத்தலவெட்டுனுவெவே ஞானதிலக்க தேரரும் ஜனாதிபதியுடன் விளை நிலங்களுக்கு சென்றிருந்தார்
from tkn
Post a Comment